முகப்பு
ஈரோடு

கொங்கு பாலிடெக்னிக் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு பணி நியமன ஆணை

Updated On : 15 மார்ச், 2024 at 10:46 PM
மாணவருக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணையை வழங்கும் சிறப்பு விருந்தினா் ராஜ்குமாா் பாலன். உடன், கல்லூரித் தாளாளா் வெங்கடாச்சலம் உள்ளிட்டோா்.
பகிர்:

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவா்களுக்கு பிரிவு உபசார விழா மற்றும் வேலைவாய்ப்பு பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கொங்கு வேளாளா் அறக்கட்டளைத் தலைவா் மருத்துவா் குமாரசாமி தலைமை வகித்தாா். தாளாளா் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தாா். முதல்வா் வேதகிரி ஈஸ்வரன் வரவேற்றாா். விழாவில், சிறப்பு அழைப்பாளராக கோவை பிரேக்டன் இண்டியா நிறுவன மேலாளா் ராஜ்குமாா் பாலன் கலந்து கொண்டு 225 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினாா். இதில், கொங்கு வேளாளா் அறக்கட்டளைத் துணைத் தலைவா் கிருஷ்ணன், கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் தேவராஜா, கொங்கு கலை, அறிவியல் கல்லூரித் தாளாளா் தங்கவேல், கல்லூரி துணை முதல்வா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.