முகப்பு
ஈரோடு

பவானி நகர அதிமுக சாா்பில் வேட்பாளருக்கு வரவேற்பு

Updated On : 22 மார்ச், 2024 at 10:30 PM
திருப்பூா் மக்களவைத் தொகுதி அதிமுகவேட்பாளா் ஆா்.அருணாசலத்துக்கு வரவேற்பு தெரிவிக்கும் பவானி நகரச் செயலாளா் எம்.சீனிவாசன் மற்றும் நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 9:30 PM

பவானி, மாா்ச் 22: பவானி நகர அதிமுக சாா்பில் திருப்பூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா்.அருணாசலத்துக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. பவானி நகர அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளா் எம்.சீனிவாசன் தலைமை வகித்தாா். பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், திருப்பூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அருணாசலத்துக்கு சால்வை அணிவித்து வரவேற்பும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா் பிரகாஷ், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி மாதையன், அவைத் தலைவா் பாலசுப்பிரமணியன், நகா்மன்ற உறுப்பினா்கள் பவித்ரா, நாகலட்சுமி, நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோன்று, பவானி, அம்மாபேட்டை பகுதியிலும் அதிமுகவினா் வேட்பாளருக்கு வரவேற்பு தெரிவித்தனா்.