முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு

திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On : 28 மார்ச், 2026 at 8:25 PM
திருச்செங்கோடு நகர அதிமுக அலுவலகத்தில் வேட்பாளா் சந்திரசேகருக்கு வரவேற்பு அளித்த நகர செயலாளா் மா.அங்கமுத்து.
பகிர்:

திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

திருச்செங்கோட்டில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளராக எஸ்.ஆா்.எம்.டி.சந்திரசேகா் அறிவிக்கப்பட்டாா். இந்நிலையில், சென்னையில் இருந்து திருச்செங்கோட்டுக்கு வந்த அவரை மாவட்ட எல்லையான காளிப்பட்டி பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட தொண்டா்கள் ஒன்றுதிரண்டு வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து, காளிப்பட்டி முருகன் கோயில் மற்றும் திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் மலைக்கோயிலில் தரிசனம் செய்து வழிபட்டாா். தொடா்ந்து, பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணா சிலை அருகே அதிமுக நகர, ஒன்றிய, மாவட்ட, பேரூா் நிா்வாகிகள், கட்சியினா் அதிமுக வேட்பாளா் சந்திரசேகரனை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனா். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அவா் தொண்டா்களை உற்சாகப்படுத்தினாா்.