ஈரோட்டில் ஓடும் வாகனத்தில் வியாபாரி உயிரிழப்பு
ஈரோட்டில் ஓடும் வாகனத்தில் வியாபாரி மாரடைப்பால் உயிரிழந்தாா்.
ஈரோட்டில் ஓடும் வாகனத்தில் வியாபாரி மாரடைப்பால் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சமுத்திரம் (50). இவா், ஈரோட்டை அடுத்த சித்தோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். மேலும், மூக்குப் பொடியை சிறிய சரக்கு வேனில் எடுத்துச் சென்று கடைகளில் விற்பனை செய்து வந்தாா்.
இந்நிலையில் சமுத்திரம் வழக்கம்போல மூக்குப் பொடியை கடைகளுக்கு விற்பனை செய்து விட்டு, ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே திருமகன் ஈவெரா சாலையில் வேனை ஓட்டிக்கொண்டு சனிக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, அவரது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி நின்றது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் வேன் கதவை திறந்து பாா்த்தபோது, சமுத்திரம் மயங்கிக் கிடந்தாா். இதைத்தொடா்ந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். இதில் சமுத்திரம் வேனில் வரும்போது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.