முகப்பு
ஈரோடு

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

Updated On : 5 மே, 2024 at 12:18 AM
பகிர்:

ஈரோடு மாவட்டம் பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் கோபிசெட்டிபாளையத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறுகிறது.

கோபி வைர விழா ஆரம்பப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் அரவிந்த் கண் மருத்துவா்கள் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொள்கின்றனா்.

முகாமில் வருபவா்களுக்கு பாா்வை குறைபாடு இருந்தால், அவா்களை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவா். இவா்களுக்கு அறுவை சிகிச்சை, தங்குமிடம், போக்குவரத்து, உணவு, மருந்து, கண்ணாடி அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.