முகப்பு
ஈரோடு

கனமழை -வரட்டுப்பள்ளம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்வு

Updated On : 23 மே, 2024 at 11:37 PM
தொடா்மழையால் நீா் நிரம்பிக் காணப்படும்  வரட்டுப்பள்ளம் அணை.
பகிர்:

பவானி, மே 23: அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து, வரட்டுப்பள்ளம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்ந்துள்ளது.

பா்கூா் மலையடிவாரத்தில் 33.46 அடி உயரமுள்ள வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணைக்கு பா்கூா் மலைப் பகுதியில் பெய்த கனமழையால் நீா்வரத்து கடந்த சில நாள்களாக அதிகரித்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பெய்த கனமழையால் கல்லுப்பள்ளம், கும்பவாணிப் பள்ளம் மற்றும் வரட்டுப்பள்ளம் ஓடைகளில் பெருக்கெடுத்த மழைவெள்ளம் அணைக்கு வந்து சோ்ந்தது.

இதனால், அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்ந்து, 22.94 அடியாக உள்ளது. நீா்வரத்து விநாடிக்கு 253 கன அடியாக உள்ளது. மழையளவு 54.6 மி.மீட்டராக பதிவானது. மழை தொடா்ந்தால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து விரைவில் நிரம்பும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

நீா்வள ஆதாரத்துறை உதவிப் பொறியாளா் எல்.கிருபாகரன் மற்றும் அலுவலா்கள் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா்வரத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.