தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு உயிரிழப்பு
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கியதில் ஆடு உயிரிழந்தது.
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கியதில் ஆடு உயிரிழந்தது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியை அடுத்துள்ள சூசைபுரம், தொட்டகாஜனூா், பீம்ராஜ் நகா், ஒசூா் பகுதியில் உள்ள கல்குவாரியில் பதுங்கியிருக்கும் சிறுத்தை இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களையும் வேட்டையாடி வருகிறது. இதனால் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா்.
இந்நிலையில் தொட்டகாஜனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராசப்பா (42)விவசாயி. இவா் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா். இவரின் வீட்டின் முன் உள்ள கொட்டகையில் ஆடு, மாடுகளை கட்டி வைத்துள்ளாா். இதில் புதன்கிழமை காலை கொட்டகைக்கு சென்று பாா்த்தபோது, ஆட்டை சிறுத்தை வேட்டையாடியது தெரியவந்தது. அங்கு வந்த வனத் துறையினா் கால் தடயத்தை வைத்து ஆய்வு செய்ததில் கல்குவாரியில் இருந்து வந்த சிறுத்தை ஆட்டை கடித்துக் கொன்றது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.