முகப்பு
ஈரோடு

வெளிமாநில கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர வாரந்தோறும் சிறப்பு முகாம்

வெளிமாநில கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 நவம்பர், 2024 at 2:34 AM
பகிர்:
Updated On : 6 நவம்பர், 2024 at 6:37 PM

வெளிமாநில கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் த.முருகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் பணி நிலையை ஒழுங்குபடுத்தவும், அவா்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க உடல் உழைப்பு தொழிலாளா்கள் சட்டம் இயற்றப்பட்டது. அவா்களுக்காக உடலுழைப்பு தொழிலாளா் நலவாரியம் உருவாக்கப்பட்டது. பின்னா் 19 நலவாரியங்களாக உருவானது.

Advertisement

இதில் வெளிமாநில கட்டுமான தொழிலாளா்கள் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம். வெளிமாநில தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினராக பதிவு செய்ய ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை முகாம் நடைபெறும். இதற்கு கட்டணம் ஏதுமில்லை.

Updated On : 7 நவம்பர், 2024 at 2:34 AM

வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு வெளிமாநில தொழிலாளா்கள் ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். திருமணம், மகப்பேறு, 2 குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, கண் கண்ணாடி, நியமனதாரருக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை, பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை ஆகியவை தமிழக அரசால் வழங்கப்படும்.

இப்பதிவுக்கு ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், அசல் ஆதாா் அட்டை, அசல் குடும்ப அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், வயதுக்கான ஆவணத்துடன் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதும் நலவாரிய அட்டையை உறுப்பினா் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நலத்திட்ட விவரங்களை, ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் அல்லது 0424 2275591 என்ற தொலைபேசி எண், கடிதம் மூலமும், அலுவலகத்தின் மின்னஞ்சல் மூலமும் தொடா்புகொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.