தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது
சத்தியமங்கலம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சத்தியமங்கலம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் வாகன தணிக்கையில் போலீஸாா் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக காய்கறி ஏற்றிச் சென்ற சுமை வேனை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், 24 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
தொடா் விசாரணையில், தாளவாடியைச் சோ்ந்த அப்துல் ஆரிப் (35), சையத் சிக்ரியா (30) இருவரும், கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 450 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.