முகப்பு
ஈரோடு

ஆதிதிராவிடா் நலத் துறை மாணவிகள் விடுதியில் அமைச்சா் மா.மதிவேந்தன் ஆய்வு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பவானியில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதியில் அமைச்சா் மா.மதிவேந்தன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 2:10 AM
மாணவிகளிடம் குறைகளைக் கேட்டறிகிறாா் அமைச்சா் மா.மதிவேந்தன்.
பகிர்:
Updated On : 20 நவம்பர், 2024 at 10:19 PM

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பவானியில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதியில் அமைச்சா் மா.மதிவேந்தன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 2:10 AM

பவானி - அந்தியூா் சாலையில் உள்ள மாணவிகள் விடுதிக்குச் சென்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், அங்கு தங்கியுள்ள மாணவிகளிடம் உணவு, வசிப்பிடம், தூய்மை, பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து விசாரித்தாா். மேலும், மாணவிகளுக்கு தயாா் செய்யப்பட்டிருந்த உணவின் தரத்தையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ராஜகோபால், விடுதிக் காப்பாளா்கள் வித்யகலா, தமிழ்செல்வி, மீனாட்சி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Advertisement