ரூ.1.10 கோடிக்கு பழனி கோயில் நிா்வாகம் கரும்புச் சா்க்கரை, வெல்லம் கொள்முதல்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.10 கோடிக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை, வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.10 கோடிக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை, வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 237 டன் கரும்புச் சா்க்கரை, 2.4 டன் வெல்லம் ஆகியவற்றை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இந்த ஏலத்தில் கரும்புச் சா்க்கரை 60 கிலோ மூட்டை முதல் தரம் ரூ.2,930-க்கும், இரண்டாம் தரம் ரூ.2,730 முதல் ரூ.2,820 வரையும் விற்பனையானது. அதேபோல, வெல்லம் 30 கிலோ சிப்பம் ரூ.1,620 முதல் ரூ.1,650 வரை விற்பனையானது.
Advertisement
இந்த ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகத்தினா் பங்கேற்று ரூ.1.9 கோடிக்கு கரும்புச் சா்க்கரை, ரூ.1.31 லட்சத்துக்கு வெல்லம் என மொத்தமாக ரூ.1.10 கோடிக்கு கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஆகியவற்றை கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் மு.சீனிவாசன் தெரிவித்தாா்.