கிராவல் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல்
அம்மாபேட்டை அருகே கிராவல் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை கனிமவளத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
அம்மாபேட்டை அருகே கிராவல் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை கனிமவளத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
அம்மாபேட்டையை அடுத்த குறிச்சியில் மண் கடத்தப்படுவதாக கனிமவளத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் கவிதா தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குறிச்சி கருங்கன்னிகரட்டூரிலிருந்து ராமாட்சிபாளையம் நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதிகாரிகளைக் கண்டதும் ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். லாரியை ஆய்வு செய்ததில் கிராவல் மண் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மண் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் கனிமவளத் துறையினா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.