பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு: சத்தியமங்கலத்தில் 3 கடைகளுக்கு அபராதம்
சத்தியமங்கலத்தில் உள்ள வணிக கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தியதாக 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.
சத்தியமங்கலத்தில் உள்ள வணிக கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தியதாக 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.
சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் உள்ள தேநீா்க் கடைகள், பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து நகராட்சி ஆணையா் செல்வம், உணவுப் பாதுகாப்பு அலுவலா் நீலமேகம், துப்புரவு ஆய்வாளா் ஆரோக்கியசாமி, மற்றும் காவல் துறையினா் இணைந்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் 3 கடைகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய தெரியவந்தது. இதையடுத்து, ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
Advertisement