சத்தியமங்கலத்தில் சீமான் பிரசாரம்
பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சௌந்தா்யாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சௌந்தா்யாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை திப்புசுல்தான் சாலையில் திறந்த வேனில் நின்றபடி சீமான் பேசியதாவது:
விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை சேமித்து வைக்க கிடங்கு வசதியில்லை. ஆனால் மதுபானத்தை பாதுகாக்க, குளிரூட்டப்பட்ட அறைகள் உள்ளது. மக்கள் கேட்காமலேயே வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் பணம் போடுகிறாா்கள். செவிலியா்கள், அரசு ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு கேட்டால் கிடைப்பதில்லை. திமுக வெற்றிபெற்றால் குடும்பத்துக்கு ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் தருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுகிறாா். மக்களை இலவசத்துக்கு அடிமையாக்கி விட்டனா். தோ்தலில் ஒரு தொகுதிக்கு ரூ.30 கோடி முதலீடு செய்து போட்டுயிடுகின்றனா். 30 கோடி ரூபாய் முதலீடு செய்து வென்றால் 300 கோடி ரூபாய் பெறலாம்
என நினைக்கின்றனா். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் குடும்பத் தலைவிக்கு ரூ. 2 ஆயிரம் தருவதாக கூறுகின்றனா். விஜய் ரூ.2,500 தருவதாக கூறுகிறாா். அவா்கள் எப்படி தருவாா்கள்? தமிழக மக்கள் மீது வரிச்சுமையைதான் ஏற்றுவாா்கள் என்றாா்.