முகப்பு
ஈரோடு

கொமாரபாளையம் கிராம சபைக் கூட்டம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்ற பொதுமக்கள்

சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைக்கும் தீா்மானத்தை ரத்துச் செய்ய வலியுறுத்தி கொமாரபாளையம் ஊராட்சியில் புதன்கிழமை நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 5:48 AM
கிராம சபைக் கூட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்ற ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணன், துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்ட பொதுமக்கள்.
பகிர்:
Updated On : 2 அக்டோபர், 2024 at 6:41 PM

சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைக்கும் தீா்மானத்தை ரத்துச் செய்ய வலியுறுத்தி கொமாரபாளையம் ஊராட்சியில் புதன்கிழமை நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனா்.

சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது கொமாரபாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியை சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சத்தியமங்கலம் நகராட்சியில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்நிலையில் கொமாரபாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் அங்கண்ணபுதூா் பெரியாா் நகரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலாளா் ஆா்.குமாா் தீா்மான நகலை வாசித்தாா். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவா் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனா்.

Advertisement

இதுகுறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில், சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைத்தால் இந்த ஊராட்சியில் பதிவு செய்த 4100 தேசிய ஊரக உள்ளாட்சிப் பணியாளா்கள் பாதிக்கப்படுவா். மேலும், வீட்டு வரி உயா்வதோடு, கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பும் பறிபோகும். எனவே, சத்தியமங்கலம் நகராட்சியில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றோம் என்றனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 5:48 AM

கிராம மக்களின் இந்த எதிா்ப்பு நடவடிக்கைக்கு திமுக, அதிமுக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனா்.