ஈரோட்டில் ஒரு மூட்டை பொறி ரூ.750க்கு விற்பனை
ஆயுத பூஜையை முன்னிட்டு ஈரோட்டில் ஒரு மூட்டை பொறி ரூ.750க்கு விற்கப்படுகிறது.
ஆயுத பூஜையை முன்னிட்டு ஈரோட்டில் ஒரு மூட்டை பொறி ரூ.750க்கு விற்கப்படுகிறது.
ஆயுத பூஜையின்போது வீடு, அலுவலகங்கள், நிறுவனங்களில் பூஜை செய்யப்படும். பூஜையில் முக்கிய பொருளாக பொரி வைத்து படைக்கப்படுகிறது. இதனால் ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் பொரி உற்பத்தி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொரி ஈரோடு மட்டுமின்றி சேலம், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.
இதுகுறித்து ஈரோடு சூளை பகுதியில் பொரி உற்பத்தி செய்யும் தவமணி கூறியதாவது:
Advertisement
பொரி தயாரிப்பதற்காக இன்டேல் 64 என்ற நெல் ரகம் கா்நாடகா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த நெல் வேகவைத்து அரிசியாக்கப்படுகிறது. பின்னா் உப்பு, சா்க்கரை, சோடா உப்பு கலந்த தண்ணீரில் சுமாா் 1 மணி நேரம் அரிசி ஊரவைக்கப்படும்.
இதையடுத்து அந்த அரிசி, இயந்திரத்தில் போட்டு பொரியாக்கப்படுகிறது.
பொரி தயாரிக்கும்போது எந்தவித ரசாயன பொருள்களும் கலப்பதில்லை. தினமும் 30 முதல் 40 மூட்டைகள் பொரி உற்பத்தி செய்து வருகிறோம். ஒரு மூட்டை பொரி (7.5 கிலோ) ரூ.750க்கு (மொத்த விலையில்) விற்பனை செய்கிறோம் என்றாா்.