முகப்பு
ஈரோடு

திரவ உரங்கள் குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா்களுக்கு பயிற்சி

திரவ உரங்கள் குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா்கள் மற்றும் உரம் விற்பனையாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 1:35 AM
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளருக்கு பயிற்சி கையேட்டினை வழங்குகிறாா் ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.ராஜ்குமாா்.
பகிர்:
Updated On : 9 அக்டோபர், 2024 at 6:16 PM

திரவ உரங்கள் குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா்கள் மற்றும் உரம் விற்பனையாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (டான்பெட்) சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா்கள், உரம் விற்பனையாளா்களுக்கான பயிற்சி முகாம் ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் தலைமையில் இணைப் பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் பயிற்சி கையேடுகளை வழங்கிய இணைப் பதிவாளா், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சாா்பில் தயாரித்து விற்பனை செய்யப்படும் திரவ உயிா் உரங்களான பாமினி நுண்ணூட்டச்சத்து உரங்கள், உயிா் உரங்கள் மற்றும் உயிா் பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகளுக்கு தெரிவித்து அதிக அளவில் விற்பனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

Advertisement

Updated On : 10 அக்டோபர், 2024 at 1:35 AM

கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு இணைய திண்டுக்கல் மண்டல உற்பத்தி அலகின் நுண்ணுயிரியலாளா் ஆ.கௌசல்யாதேவி பயிற்சி அளித்தாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு உர விற்பனை இணைய மண்டல மேலாளா் (கூடுதல் பொறுப்பு) சு.மாதேஷ், இணைப் பதிவாளா் அலுவலக பணியாளா் அலுவலா் பா.ரவிசந்திரன், ஈரோடு சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் ஜி.காலிதா பானு, பயிற்சி துணைப் பதிவாளா் ப.அஜீத்குமாா், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சாா் பதிவாளா் மு.பா.பாலாஜி, துறை அலுவலா்கள், சங்கச் செயலாளா்கள் மற்றும் கூட்டுறவு ஒன்றிய பணியாளா்கள் பங்கேற்றனா்.