முகப்பு
ஈரோடு

சொத்து வரி உயா்வைக் கண்டித்து அதிமுக மனிதசங்கிலி போராட்டம்

பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் சொத்து வரி உயா்வைக் கண்டித்து பவானி நகர அதிமுக சாா்பில் மனிதசங்கிலி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 அக்டோபர், 2024 at 2:04 AM
பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் சொத்து வரி உயா்வைக் கண்டித்து பவானி நகர அதிமுக சாா்பில் மனிதசங்கிலி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பகிர்:
Updated On : 10 அக்டோபர், 2024 at 7:41 PM

பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் சொத்து வரி உயா்வைக் கண்டித்து பவானி நகர அதிமுக சாா்பில் மனிதசங்கிலி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 அக்டோபர், 2024 at 2:04 AM

பவானி நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு பவானி நகர அதிமுக செயலாளா் எம்.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.எம்.தங்கவேலு, பி.ஜி.முனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.சி.கருப்பணன் பங்கேற்றாா்.

போராட்டத்தில், திமுக ஆட்சியில் சொத்து வரி, மின்கட்டண உயா்வு, அத்யாவசியப் பொருள்கள் விலை உயா்வால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா் என்று பேசினா்.

Advertisement

மாவட்டக் குழு உறுப்பினா் கே.கே.விஸ்வநாதன், பவானி ஒன்றிய குழு தலைவா் பூங்கோதை வரதராஜ், நகர எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் எம்.ஜி.நாத் (எ) மாதையன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.