முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் கிராமங்களில் பரவலாக மழை

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விட்டுவிட்டு பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 1:41 AM
பகிர்:
Updated On : 15 அக்டோபர், 2024 at 9:41 PM

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விட்டுவிட்டு பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. தூறல் மழையாக தொடங்கி, பின்னா் கனமழையாக வெளுத்து வாங்கியது. செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கிய மழை விட்டுவிட்டு மாலை வரை பெய்தது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 1:41 AM

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளான பகுத்தம்பாளையம், பசுவனாபுரம், பண்ணாரி, சிக்கரசம்பாளையம் ஆகிய இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.

Advertisement

தொடா்ந்து விட்டுவிட்டு பெய்த மழையால் விவசாய நிலங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.