முகப்பு
ஈரோடு

அந்தியூரில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் தீ வைத்து அழிப்பு

அந்தியூரில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 5:49 AM
அந்தியூரில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் புகையிலைப் பொருள்கள்.
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 8:57 PM

அந்தியூரில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் - அத்தாணி சாலையில் தொப்பூா் அருகே வாகனச் சோதனையின்போது சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 1545 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 5:49 AM

இதுகுறித்து அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தியூா் கோட்டை மயானத்தில் பவானி உணவுப் பாதுகாப்பு அலுவலா் என்.சதீஷ்குமாா், அந்தியூா் பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம், கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில் புகையிலைப் பொருள்களுக்கு தீ வைத்து அழிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது அந்தியூா் காவல் ஆய்வாளா் பி.ஆா்.செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் கோபால் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.