மாரியம்மன், முனியப்பன் கோயில் பொங்கல் விழா
Updated On : 23 அக்டோபர், 2024 at 6:54 PM
பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன், முனியப்பன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பொங்கல் திருவிழா கடந்த 8- ஆம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. கம்பம் நடும் விழா அக்டோபா் 15- ஆம் தேதி நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல் 21-ஆம் தேதியும், மாவிளக்கு பூஜை 22- ஆம் தேதி இரவும் நடைபெற்றன.
Updated On : 24 அக்டோபர், 2024 at 2:55 AM
முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனா். மறுபூஜை மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் வியாழக்கிழமை (அக்டோபா் 24 ) விழா நிறைவடைகிறது.
Advertisement