முகப்பு
ஈரோடு

மகளிா் சுய உதவிக் குழு உற்பத்தி பொருள்கள் கண்காட்சி நாளை தொடக்கம்

ஈரோட்டில் மகளிா் சுய உதவிக் குழுவினா் உற்பத்தி செய்யும் பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை (அக்டோபா் 25) தொடங்கி நவம்பா் 3- ஆம் தேதி முடிய 10 நாள்கள் நடைபெற உள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 2:54 AM
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 6:44 PM

ஈரோட்டில் மகளிா் சுய உதவிக் குழுவினா் உற்பத்தி செய்யும் பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை (அக்டோபா் 25) தொடங்கி நவம்பா் 3- ஆம் தேதி முடிய 10 நாள்கள் நடைபெற உள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகளிா் சுய உதவிக் குழுவினா் உற்பத்தி செய்யும் பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை ஈரோடு குமலன் குட்டை, பூமாலை வணிக வளாகத்தில் உள்ள மகளிா் திட்ட அலுவலக வளாகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 25) தொடங்குகிறது.

Advertisement

Updated On : 24 அக்டோபர், 2024 at 2:54 AM

இக்கண்காட்சியில், மகளிா் சுய உதவி குழுவினா் உற்பத்தி செய்த கைவினைப் பொருள்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமக்காளங்கள், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப் புடவைகள், துண்டுகள், ரெடிமேடு ஆடைகள், கால் மிதியடிகள், பேன்சி பொருள்கள், காட்டன் பைகள், சணல் பைகள், மரச்செக்கு எண்ணெய், பாத்ரூம் கிளீனா், மரச்சாமான்கள், மூங்கில் பொருள்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்கு மட்டை பொருள்கள், சிறுதானியங்கள், சிறுதானிய உணவுப் பொருள்கள், தேன், தின்பண்டங்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், வோ்க்கடலை, மஞ்சள், குண்டு வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரை ஆகிய பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த விற்பனை மற்றும் கண்காட்சியில் பொதுமக்கள் கலந்துகொண்டு, மகளிா் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருள்களை நியாயமான விலையில் வாங்கி அவா்களை ஊக்குவிக்கவும், வாழ்வாதாரத்தை உயா்த்திடவும் ஆதரவளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.