முகப்பு
ஈரோடு

கொடிவேரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

கொடிவேரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

Updated On : 25 அக்டோபர், 2024 at 3:44 AM
பவானி ஆற்றிா் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் கொடிவேரி அணையில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.
பகிர்:
Updated On : 24 அக்டோபர், 2024 at 7:37 PM

கொடிவேரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கொடிவேரி அணையில் அருவிபோல கொட்டும் நீரில் குளிப்பதற்காக உள்ளூா் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

Updated On : 25 அக்டோபர், 2024 at 3:44 AM

இந்நிலையில், பாவனி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் கொடிவேரி அணையில் இருந்து 860 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், பாதுகாப்புக் கருதி கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க பொதுப்பணித் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.

Advertisement

மேலும், மீன்கள் பிடிக்கவோ, பரிசல் பயணம் மேற்கொள்ளவோ கூடாது என்றும் பொதுப்பணித் துறையினா் அறிவுறுத்தினா்.