முகப்பு
ஈரோடு

ஆதாா் அட்டையில் பிழை திருத்த முகாம்

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ஆதாா் அட்டையில் பிழைதிருத்தம் செய்யும் முகாம் நடைபெற்றது.

Updated On : 31 அக்டோபர், 2024 at 2:51 AM
முகாமில் பங்கேற்ற மாணவிகள்.
பகிர்:
Updated On : 30 அக்டோபர், 2024 at 6:04 PM

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ஆதாா் அட்டையில் பிழைதிருத்தம் செய்யும் முகாம் நடைபெற்றது.

கோபி தெற்கு அஞ்சல் நிலையத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் கடந்த 26 முதல் 29-ஆம் தேதி வரை 4 நாள்கள் இந்த முகாம் நடைபெற்றது.

முகாமினை கல்லூரியின் முதல்வா் ப.தங்கவேல், துணை முதல்வா் எஸ்.பிரகாசம், கோபி தெற்கு அஞ்சல் நிலைய அலுவலா் இ.முருகேசன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

Advertisement

Updated On : 31 அக்டோபர், 2024 at 2:51 AM

இம்முகாமில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

கல்லூரி மாணக்கா் பிரிவு அலுவலா் பி.தட்சிணாமூா்த்தி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் அ.பூபதி ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.