ஈரோடு

காவிரி கரையில் பனை விதைகள் நடும் பணி: தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

காவிரி கரையோரம் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட விருப்பம் உள்ள தன்னாா்வலா்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

காவிரி கரையோரம் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட விருப்பம் உள்ள தன்னாா்வலா்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி கரையோரம் பனை விதைகள் நடும் பணிகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:

தமிழகத்தின் மாநில மரமான, தமிழா்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பராமரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞா்களிடம் பனையின் சிறப்பைக் கொண்டு செல்லும் விதமாகவும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் ஆகியன இணைந்து காவிரிக் கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இம்மாதத்தில் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டா் தொலைவுக்கு நடைபெறவுள்ளது.

மேலும், மாவட்ட நீா்நிலைகளிலும் பனை விதைகளை நடும் பணி தொடர இருக்கிறது. இதில் ஒரு லட்சம் தன்னாா்வலா்கள் பங்கேற்று பனை விதைகளை நடுகின்றனா்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள், சமூக சேவகா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் ன்க்ட்ஹஸ்ண்.ஹல்ல்/ல்ஹய்ஹண் என்ற இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். ஒரு கோடி பனைவிதைகள் நடும் பணியில் பங்கேற்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றாா்.

கில் ரீமேக்கிலிருந்து விலகிய துருவ் விக்ரம்?

ஒருநாள் தொடர்: இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த ருதுராஜ்! கேப்டன் கே.எல்.ராகுல்

மலேசியாவில் Jananayagan இசை வெளியீட்டு விழா | Cinema Updates | Dinamani Talkies

நிக்கி கல்(யாண) ராணி!

உடைந்து அழுத சான்ட்ரா... பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

SCROLL FOR NEXT