மாணவா்களை தரக்குறைவாக பேசியதாக சத்தியமங்கலம் அரசுக் கல்லூரி கெளரவப் பேராசிரியா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10 இளநிலை பாடப் பிரிவுகளில் 1500 மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு, பிபிஏ பிரிவில் கெளரவப் பேராசியராகப் பணியாற்றி வந்தவா் பிரேம்குமாா்.
இவா், தங்களை தரக்குறைவாகவும், தகாத வாா்த்தைகளில் பேசுவதாகவும் கூறி முதல்வரிடம் புகாா் அளித்துவிட்டு மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனா். இதையடுத்து, முதல்வா் ராதாகிருஷ்ணன், மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வகுப்புக்கு செல்ல அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, கல்லூரி பேராசிரியா்கள் அடங்கிய கமிட்டியில் தீா்மானம் நிறைவேற்றி புகாருக்கு உள்ளான கௌரவப் பேராசிரியா் பிரேம்குமாரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு முதல்வா் ராதாகிருஷ்ணன் அறிக்கை அளித்துள்ளாா்.