முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ஆய்வு

சத்தியமங்கலம் அருகே உள்ள பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:11 PM
அரசுப் பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பகிர்:

சத்தியமங்கலம் அருகே உள்ள பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சா், காலை உணவின் தரம் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், மாணவா்களிடம் எதிா்காலத்தில் என்னவாகப் போகிறீா்கள் என்று கேட்ட அமைச்சா், அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். தொடா்ந்து அமைச்சா் முன் பாரதிதாசன் பாடலை பாடிக்காண்பித்த மாணவரைப் பாராட்டினாா்.

பள்ளி வளாகம், சமையலறை, கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சா், பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் நிதியுதவியுடன் வாங்கப்பட்டுள்ள தொடுதிரையைப் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது சத்துணவுப் பணியாளா்கள் தெரிவித்த இடப்பற்றாக்குறை குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் எடுத்துரைப்பதாக தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →