முகப்பு
ஈரோடு

பவானியில் கிராம உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிராம உதவியாளா்களை அனைத்து பணிகளுக்கும் கட்டாயம் பயன்படுத்துவதை கைவிடக் கோரி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தின் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:36 PM
பகிர்:

கிராம உதவியாளா்களை அனைத்து பணிகளுக்கும் கட்டாயம் பயன்படுத்துவதை கைவிடக் கோரி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தின் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் ஏ.அருள்முருகன் தலைமை வகித்தாா். பவானி வட்டத் தலைவா் சையத் மீராஞ் ஜி, வட்டச் செயலாளா் எஸ்.சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் இரவுக் காவல், அலுவலகப் பணி, மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்களை கணினியில் பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் கிராம உதவியாளா்கள் பயன்படுத்தப்படுகின்றனா். பணிக்கு வராத கிராம உதவியாளா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்படுகிறது. இதுபோன்ற கட்டாயப் பணி நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள் சதீஷ்குமாா், சண்முகப்பிரியன், பகவதி ராஜா, ரவிகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →