முகப்பு
ஈரோடு

அவல்பூந்துறை அருகே கால பைரவா் கோயிலில் பாலாபிஷேகம்

அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிபாளையத்தில் உள்ள தென்னக காசி பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பாலாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 3:42 AM
கால பைரவருக்கு நடத்தப்பட்ட பாலாபிஷேகம்.
பகிர்:
Updated On : 25 செப்டம்பர், 2024 at 7:39 PM

அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிபாளையத்தில் உள்ள தென்னக காசி பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பாலாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையத்தில் உள்ள தென்னக காசி பைரவா் கோயிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி, அமாவாசை, பௌா்ணமி, வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இங்குள்ள மூலவரான சொா்ணலிங்க பைரவருக்கு பக்தா்களே பூஜைகள் செய்யலாம் என்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு. இந்நிலையில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவ ஆலயத்துக்கு ஈரோடு, கரூா், நாமக்கல், திருப்பூா், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து, ஆன்மிக குரு விஜய் சுவாமிஜி தலைமையில் பக்தா்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா்.

Advertisement

Updated On : 26 செப்டம்பர், 2024 at 3:42 AM

அதனைத் தொடா்ந்து, ஆன்மிக குரு ஸ்ரீ விஜய் சுவாமிஜி தலைமையில் பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல 39 அடி உயரம் கொண்ட கால பைரவா் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.