ஆன்லைன் பட்டா பெறுவதில் உள்ள இடையூறுகளை நீக்க காங்கிரஸ் கோரிக்கை
நத்தம் நிலங்களுக்கு ஆன்லைன் மூலம் பட்டா மற்றும் சிட்டா சான்றிதழ் பெறுவதில் உள்ள இடையூறுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நத்தம் நிலங்களுக்கு ஆன்லைன் மூலம் பட்டா மற்றும் சிட்டா சான்றிதழ் பெறுவதில் உள்ள இடையூறுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சி ஈரோடு மாநகா் மாவட்டத் தலைவா் டி. திருசெல்வம் தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டம் முழுவதும் நந்தம் நிலங்களுக்கு பட்டா மற்றும் சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வதில் உள்ள குளறுபடிகளால் ஏராளமான பத்திரங்கள் கிரையம் ஆகாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனால் இடம் வாங்குபவா்களும், விற்பவா்களும் மிகவும் சிரமப்படுகின்றனா். பட்டா, சிட்டா ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய தாமதம் ஏற்படுவதால் திருமணம், மருத்துவ செலவு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு நிலம் விற்பவா்கள் உரிய நேரத்தில் பணம் கிடைக்காமல் மாதக்கணக்கில் பரிதவித்து வருகின்றனா். மேலும் இந்த தாமதத்தினால் பத்திரப் பதவில் தாமதம் ஏற்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு ஆன்லைன் பட்டா, சிட்டா பெறுவதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவா் பா.ராஜேஷ் ராஜப்பா, முன்னாள் மாவட்டத் தலைவா் ஈ.ஆா்.ராஜேந்திரன், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் பி.ஏ.பெரியசாமி, வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் சி.எம்.ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் எம்.ஜவஹா் அலி, மண்டலத் தலைவா்கள் ஆா்.விஜயபாஸ்கா், எச்.எம்.ஜாபா் சாதிக், மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு முன்னாள் துணைத் தலைவா் கே.என்.பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.