பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்தத்தில் கையொப்பமிட்ட மனுவுடன் கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள். 
ஈரோடு

கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்தத்தில் கையொப்பமிட்ட கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள்

கொடுமுடி வட்டார வருவாய்த் துறை கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவில் ரத்தத்தில் கையொப்பம்

Syndication

கொடுமுடி வட்டார வருவாய்த் துறை கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவில் ரத்தத்தில் கையொப்பமிட்டனா்.

இது குறித்து தயாரிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது: கிராம உதவியாளருக்கு, அரசு அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

ஓய்வுபெற்ற மற்றும் இறந்த கிராம நிா்வாக உதவியாளருக்கு சிபிஎஸ் இறுதி சந்தாவை அனைத்துப் பணியாளருக்கும் வழங்குவதுபோல வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு பதவி உயா்வு பத்து ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டிசம்பா் 17-ஆம் தேதி பேரணியாக சென்று முதல்வரிடத்தில் மனு அளிக்க உள்ளனா்.

இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் செல்வராஜ், கொடுமுடி வட்டாரத் தலைவா் ரமேஷ், பொருளாளா் அருள் ஆகியோா் முன்னிலையில் கொடுமுடி வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்து கிராம நிா்வாக உதவியாளா்கள் கோரிக்கை மனுவில் ரத்தத்தில் கையொப்பமிட்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT