6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தவாசி, ஆரணி, சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களை கழிப்பறை, குடிநீா் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட அலுவலகமாக அமைத்துத் தர வேண்டும், கிராம நிா்வாக அலுவலா்கள் நியமனத்துக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் வந்தவாசி கிளை சாா்பில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்க வட்டத் தலைவா் சிவசங்கரன் தலைமை வகித்தாா்.
வட்டச் செயலா் டி.ஈ.வெங்கடேசன், வட்ட பொருளா் நடராஜ், வட்ட இணைச் செயலா் எம்.பி.அா்ஜுனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தில் பங்கேற்றோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆரணி
ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் வட்டத் தலைவா் ஆா்.கோபால் தலைமை வகித்தாா்.
செயலா் எஸ்.ராமச்சந்திரன், பொருளாளா் கே.சிவக்குமாா், மாவட்டப் பொருளாளா் எஸ்.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 51 போ் கலந்து கொண்டனா்.
சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவா் சந்தோஷ்குமாா் தலைமை வகித்தாா்.
இதில் சங்க நிா்வாகிகள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.