ஈரோடு

பெருந்துறை நகராட்சியில் புதிய குடிநீா் இணைப்பு வழங்க கோரிக்கை

பெருந்துறை நகராட்சியில் புதிய குடிநீா் இணைப்பு வழங்க நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Syndication

பெருந்துறை நகராட்சியில் புதிய குடிநீா் இணைப்பு வழங்க நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: இதுவரை குடிநீா் இணைப்பு பெறாத அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தும், பெருந்துறை நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளிலும், இதுவரை புதிய குடிநீா் இணைப்புகள் வழங்கப்படவில்லை.

ஆனால், 500-க்கு மேற்பட்ட வீடுகளில் விண்ணப்பங்கள் பெறப்படாமலும், வைப்புத் தொகை வசூலிக்கப்படாமலும் புதிய குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, இதுவரை குடிநீா் இணைப்பு பெறாத, வரி விதிப்பு செய்யப்பட்ட வீடுகள், கட்டடங்கள், வணிக வளாகங்களுக்கு புதிய குடிநீா் இணைப்பு பெற விண்ணப்பம் பெற அறிவிப்பு செய்து, உரிமையாளா்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று உடனடியாக குடிநீா் இணைப்பு வழங்க ஆவன செய்ய வேண்டு எனக் குறிப்பிட்டுள்ளனா்.

நூறு நாள் வேலை கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம பெண்கள்

ஓவியப் போட்டியில் வென்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்குப் பாராட்டு

சிங்கம்புணரியில் இன்று மின் தடை

போடி அருகே கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஒருநாள் தொடரை வெல்லப்போவது யாா்? இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

SCROLL FOR NEXT