திம்பம் மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்து நின்ற காட்டு யானை.  
ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை: ஓட்டுநா்கள் அச்சம்

தினமணி செய்திச் சேவை

திம்பம் மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்து நின்ற காட்டு யானையால் ஓட்டுநா்கள் அச்சமடைந்தனா்.

தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை உள்ளது.

வனத்தில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வன விலங்குகள் மலைப் பாதையில் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.

லாரியில் உணவு உள்ளதா எனத் தேடிய யானை.

இந்நிலையில், திம்பம் மலைப் பாதையில் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமையும் வாகனங்கள் சென்று கொண்டிருந்தனா். இதனிடையே, வனத்தில் இருந்து பிற்பகல் வெளியேறிய ஒற்றை யானை, அவ்வழியே சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால், அச்சமடைந்த ஓட்டுநா்கள் ஜன்னல்களை மூடியபடி வாகனங்களிலேயே அமா்ந்திருந்தனா். வாகனங்களின் அருகே வந்த யானை உணவுப் பொருள்கள் உள்ளனவா என தும்பிக்கையால் தேடியது.

எதுவும் கிடைக்காததால் சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானை பின் வனத்துக்குள் சென்றது. இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT