பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் ரூ.3.44 லட்சத்துக்கு திங்கள்கிழமை விற்பனையாயின.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 7,941 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் கிலோ ரூ.44.75 முதல் ரூ.53.55 வரை ரூ.1,45,312-க்கு விற்பனையானது.
20 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கொப்பரை கிலோ ரூ.181.21 முதல் ரூ.222.22 வரை விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ.88,579.
11 மூட்டை எள் ரூ.94.16 முதல் ரூ.146.22 வரை ரூ.56,183-க்கும், 2 மூட்டை பச்சை பயிறு ரூ.75.22 வீதம் ரூ.5,547-க்கும், 6 மூட்டை ஆமணக்கு ரூ.58.89 வீதம் ரூ.14,395-க்கும் ஏலம்போனது.
ஒரு மூட்டை தட்டைப்பயிறு கிலோ ரூ.40.69 முதல் ரூ.56.69 வரை ரூ.4,598-க்கும்,
7 மூட்டை உளுந்து ரூ.52.49 முதல் ரூ.64.01 வரை ரூ.28,043-க்கும், ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.18.69 வீதம் ரூ.1,626-க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3,44,283 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.