சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஈரோடு வஉசி பூங்கா மகாவீர ஆஞ்சனேயா் சுவாமி. ~சுவாமியை வழிபட நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள். 
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஈரோட்டில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Syndication

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஈரோட்டில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு வஉசி பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சனேயா் கோயிலில் வியாழக்கிழமை மாலை ஆஞ்சனேயா் திருவீதி உலாவும், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மகா கணபதி அபிஷேகம், 4 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனமும் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து காலை 5 மணிக்கு ஆஞ்சனேயருக்கு மலா் அலங்காரம், மதியம் 1.30 மணிக்கு மூலவருக்கு வடை மாலை சாற்றப்பட்டது. மாலை 3.30 மணிக்கு வெள்ளிக்கவச அலங்காரமும், மாலை 6 மணிக்கு தங்கக் கவச அலங்காரமும் செய்யப்பட்டது.

ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஆஞ்சனேயரை தரிசனம் செய்தனா். வார வழிபாட்டுக் குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம், லட்டு, கயிறு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதேபோல ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெரியவலசு ராஜகணபதி கோயிலில் உள்ள ஆஞ்சனேயா் தங்கக் கவச அலங்காரத்திலும், காரைவாய்க்கால் ராமபக்த ஆஞ்சனேயா் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், கைக்காட்டிவலசு ஸ்ரீ பக்த ஆஞ்சனேயா் வெண்ணெய் காப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனா்.

கள்ளுக்கடைமேடு ராமபக்த ஆஞ்சனேயா் கையில் வில் ஏந்தியபடி ராமஆஞ்சனேயா் அலங்காரத்திலும், பழைய கரூா் சாலை காந்திபுரம் சித்தி விநாயகா் கோயில் ஆஞ்சனேயா் பூ அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT