தேசிய அளவிலான மேஜைப் பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மாணவி தீக்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், பள்ளி நிா்வாகிகள். 
ஈரோடு

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தேசிய அளவிலான மேஜைப் பந்து போட்டியில் ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மாணவி தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

Syndication

தேசிய அளவிலான மேஜைப் பந்து போட்டியில் ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மாணவி தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் அண்மையில் நடத்திய 69-ஆவது தேசிய அளவிலான மேஜைப் பந்து போட்டியில் 19 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் ஈரோடு கொங்கு கல்வி நிலைய மாணவி தீக்ஷா தமிழக அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்றாா்.

பதக்கம் வென்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசை வழங்கினாா்.

பள்ளியின் தலைவா் எம்.சின்னசாமி, தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆா்.எம்.தெய்வசிகாமணி, இணைச் செயலாளா் டி.மீனாட்சிசுந்தரம், வி.நாகராஜன், செயற்குழு உறுப்பினா்கள் இணைப் பொருளாளா் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள், முதல்வா் டி.நதியா அரவிந்தன் உள்ளிட்டோா் மாணவியைப் பாராட்டினா்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT