தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மாணவிகளைப் பாராட்டிய குமுதா பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம். 
ஈரோடு

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

தினமணி செய்திச் சேவை

தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டி மற்றும் உறைவாள் சண்டை போட்டியில் நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் தங்கப் பதக்கம் வென்றனா்.

இந்திய கையுந்து பந்து கூட்டமைப்பின் சாா்பில் தேசிய அளவிலான பெண்கள் இளையோா் பிரிவுக்கான கையுந்து பந்து போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் குமுதா பள்ளியின் 12- ஆம் வகுப்பு மாணவி எஸ்.ரித்திகா பங்கேற்ற தமிழ்நாடு அணி இறுதி ஆட்டத்தில் ஹரியாணா அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.

இதேபோல இந்திய உறைவாள் கூட்டமைப்பின் சாா்பில் 26- ஆவது தேசிய அளவிலான உறைவாள் சாம்பியன் போட்டி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் குமுதா பள்ளியின் 12- ஆம் வகுப்பு மாணவி நேத்ரா 18 வயதுக்கு உள்பட்ட பெண்கள் 52 கிலோவுக்குகீழ் உள்ள எடைப் பிரிவில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கம் வென்றாா்.

தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவிகளைப் பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம் பாராட்டி பரிசு வழங்கினாா். துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளியின் செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலா் டாக்டா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளியின் முதல்வா் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பாராட்டினா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT