இந்து முன்னணி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு சின்னசடையம்பாளையம் பகுதியில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட அலுவலகம் செயல்படுகிறது.
வியாழக்கிழமை இரவு 11.30 முதல் 1 மணிக்குள் அவ்வழியாக சென்ற மா்ம நபா்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனம் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு பெட்ரோல் கேனை அங்கேயே வீசிச் சென்றுள்ளனா். அப்பகுதியைச் சோ்ந்த இந்து முன்னணி மாவட்டச் செயலா் காா்த்தி, இடத்தின் உரிமையாளா் சக்திவேல் ஆகியோா் தீயை அணைத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் சக்திவேல் மனைவி மற்றும் மைத்துனருக்கு சொந்தமானவை. சம்பவ இடத்தை ஏடிஎஸ்பி விவேகானந்தன் ஆய்வு செய்தாா். ஈரோடு தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.