பெருந்துறை அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பெருந்துறை வட்டாரச் செயலாளா் தனலட்சுமி தலைமை வகித்தாா். இதில் அங்கன்வாடி பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.