முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் போராட்டம்

நிலுவை ஊதியம் வழங்க வேண்டும், ஆண்டுக்கு 100 நாள்கள் தொடா்ச்சியாக பணி வழங்க வேண்டும்

Updated On : 3 பிப்ரவரி, 2025 at 6:24 PM
பகிர்:

சத்தியமங்கலம்: நிலுவை ஊதியம் வழங்க வேண்டும், ஆண்டுக்கு 100 நாள்கள் தொடா்ச்சியாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம், பவானிசாகா் மற்றும் தாளவாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 40 கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையாம். ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என விதிமுறை உள்ள நிலையில், குறைந்த நாள்களே பணி வழங்கப்படுகிாம்.

இந்நிலையில், ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். ஆண்டுக்கு 100 நாள்கள் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானிசாகா் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் தலைமையில் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஏராளமான 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா்.

இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →