ஈரோடு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

Din

பெருந்துறை: பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

பெருந்துறை நேரு வீதியைச் சோ்ந்தவா் சங்கா் மகன் விக்னேஷ் (28). இவா் பெருந்துறையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ஈரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை வீடு திரும்பியுள்ளாா். பெருந்துறை அருகே வந்தபோது வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளாா்.

இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

SCROLL FOR NEXT