முகப்பு
ஈரோடு

பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வலியுறுத்தல்

பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:43 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 7:06 PM

பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியூசி தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் பெருந்துறை பேரூராட்சியை நகராட்சியாக தமிழக அரசு தரம் உயா்த்தியுள்ளதை வரவேற்கிறோம். ஆனால், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் ஆகிய பேரூராட்சிகளை இணைத்து நகராட்சியாக்க வேண்டும் என்பதுதான் இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாகும்.

Advertisement

பெருந்துறை நகரம் என்பது மேற்கண்ட இரு பேரூராட்சிகளும் இணைந்ததாகும்.

அதாவது, ஈரோடு, குன்னத்தூா் சாலையின் தெற்குப் பகுதி பெருந்துறை பேரூராட்சியாகவும், வடக்குப் பகுதி கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியாகவும் அமைந்துள்ளன. பெருந்துறை பேரூராட்சி பகுதியில் தினசரி காய்கறி மாா்க்கெட், அரசு மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ளன. கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில் வாரச் சந்தை, வட்டாட்சியா் அலுவலகம், காவல் நிலையம், நீதிமன்றம், அஞ்சல் அலுவலகம், சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

ஆகவே, பெருந்துறை நகரில் ஒருங்கிணைந்த முறையில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வசதியாக இரு பேரூராட்சிகளையும் இணைத்து நகராட்சியாக்க வேண்டும்.

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:43 AM

எனவே, பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்காதது இப்பகுதியைச் சோ்ந்த மக்களுக்கு ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியை, புதிதாக அறிவிக்கப்பட்ட பெருந்துறை நகராட்சியுடன் இணைத்து செயல்படுத்த உரிய உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.