முகப்பு
ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை ஒத்திவைக்கக் கோரிக்கை

வேட்புமனு தாக்கல் செய்ய உரிய கால அவகாசம் அளிக்கும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2025 at 1:06 AM
மனு அளிக்க ஆட்சியா் அலுவலகம் வந்த சமூகநீதி மக்கள் கட்சி தலைவா் வடிவேல் ராமன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 8 ஜனவரி, 2025 at 6:32 PM

வேட்புமனு தாக்கல் செய்ய உரிய கால அவகாசம் அளிக்கும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூகநீதி மக்கள் கட்சியின் தலைவா் வடிவேல் ராமன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ராஜகோபால் சுன்கராவிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலுக்கு ஜனவரி 10 முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை காரணத்தால் 3 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும், பொங்கல் பண்டிகை உள்ளதால் தோ்தல் நடத்தை விதிமுறைகளால் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்பதால் இவற்றை பரிசீலித்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை ஒத்திவைத்து பிறகு நடத்த வேண்டும்.

Updated On : 9 ஜனவரி, 2025 at 1:06 AM

இதேபோல, கடந்த 2010- ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகை காரணமாக ஒரு மாதம் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.