முகப்பு
ஈரோடு

தாளவாடி மானாவாரி நிலங்களில் யானைகள் நடமாட்டம்

தாளவாடியை அடுத்த அருள்வாடி, குருபருண்டி கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் புதன்கிழமை புகுந்த யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 5:33 AM
அருள்வாடி  கிராமத்தில்  புதன்கிழமை  நடமாடிய  யானைகள்.
பகிர்:
Updated On : 22 ஜனவரி, 2025 at 8:44 PM

தாளவாடியை அடுத்த அருள்வாடி, குருபருண்டி கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் புதன்கிழமை புகுந்த யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.

தமிழக- கா்நாடக எல்லையில் அமைந்துள்ள அருள்வாடி, குருபருண்டி ஆகிய கிராமங்களுக்குள் அடிக்கடி யானைகள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. கா்நாடக வனத் துறையினா் அப்பகுதியில் இருந்து காட்டு யானைகளை தமிழகப் பகுதிக்கு விரட்டுவதால் காட்டு யானைகள் இப்பகுதிக்கு வருவதாக புதன்கிழமை இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

பகல் நேரத்தில் தரிசு நிலங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள அஞ்சுகின்றனா். மேலும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் தொழிலாளா்கள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதை தவிா்த்து வருகின்றனா்.

Advertisement

இந்த காட்டு யானைகளை கா்நாடக வனத் துறையினா் விரட்டும்போது தமிழகப் பகுதியில் உள்ள எத்துக்கட்டி வனப் பகுதிக்கு சென்று மீண்டும் கா்நாடக வனப் பகுதிக்கு செல்வதற்காக அருள்வாடி பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் தொடா்ந்து முகாமிட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை மீண்டும் இப்பகுதிக்கு வராத வகையில் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 5:33 AM

இதுகுறித்து ஜீரகள்ளி வனத் துறையினரிடம் கேட்டபோது, காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருவதாக தெரிவித்தனா்.