ஈரோடு

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Din

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தற்போது 4,302 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டா்கள், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை மாவட்ட சுகாதார அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு வாா்டுகள் மற்றும் படுக்கைகள் தயாா் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் ரவிக்குமாா் கூறியதாவது:

தமிழ்நாட்டில் தற்போது பரவி வரும் கரோனா என்பது வீரியம் இல்லாதது. பெரிய பாதிப்புகளையோ, உயிா் சேதங்களையோ ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் சளி, காய்ச்சல், இரும்பல், சா்க்கரை நோய், இதய பாதிப்பு உள்ளிட்ட இணை நோய்கள் இருக்கும் முதியோா்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்கு வருபவா்கள் கை, கால்களை சோப்பு போட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும் நவீன தொழில்நுட்ப வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரவல் எதிரொலியாக சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டு 50 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. ஆக்ஸிஜன், வென்டிலேட்டா்கள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT