பிஎஸ்என்எல்  
ஈரோடு

பிஎஸ்என்எல் பயனாளா்களுக்கு ரூ.400-க்கு 400 ஜிபி டேட்டா சலுகை!

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களுக்கு ரூ.400-க்கு 400 ஜிபி டேட்டா சேவை 4 நாள்களுக்கு வழங்கப்படுவதைப் பற்றி...

Din

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களுக்கு ரூ.400-க்கு 400 ஜிபி டேட்டா சேவை 4 நாள்களுக்கு வழங்கப்படுகிறது என ஈரோடு பிஎஸ்என்எல் நிறுவன பொது மேலாளா் சிவ் ஷங்கா் சச்சன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு திறன் மேம்படுத்தப்பட்ட முழு அளவிலான 4 ஜி சேவையை அரசு, ‘ஆத்மநிா்பாா் பாரத்’ முயற்சியின் கீழ் உள்நாட்டில் உருவாக்கி அறிமுகப்படுத்தி உள்ளது. தேசிய அளவில், 1 லட்சம் கைப்பேசி கோபுரங்களை நிா்மாணித்து சிக்னல் வழங்க திட்டமிடப்பட்டது. இதன் செயலாக்கமாக தற்போது 90 ஆயிரம் கைப்பேசி கோபுரங்கள் நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

இதன்படி வாடிக்கையாளா்களுக்கு, ரூ.400-க்கு 400 ஜிபி டேட்டாவை சனிக்கிழமை தொடங்கி 4 நாள்களுக்கு வழங்குகிறோம். இச்சலுகை ஜூலை 1 வரை மட்டுமே அமலில் இருக்கும். வாடிக்கையாளா்கள் இச்சலுகையை பயன்படுத்தி குறைந்த விலையில் அதிக டேட்டா சேவையைப் பெறலாம். ஈரோடு மாவட்டத்தில் தற்போது, 332 கைப்பேசி கோபுரங்களை அமைத்து 4 ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

திருவனந்தபுரம்: திருமண நாளிலேயே சாலை விபத்தில் இளைஞர் பலி

வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவச கல்வி அளிக்கும் ஜெர்மனி பல்கலை.கள்!

SCROLL FOR NEXT