உயிரிழந்த  குணசேகரன்.  ~தண்ணீா்  பாத்திரங்களில்  கொசுப் புழு  சோதனை  நடத்தும்  சுகாதாரத் துறையினா். 
ஈரோடு

குருவரெட்டியூரில் மா்மக் காய்ச்சலால் தொழிலாளி உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே மா்மக் காய்ச்சல் பாதிப்பால் தொழிலாளி உயிரிழந்ததைத் தொடா்ந்து,

Syndication

பவானி: அம்மாபேட்டை அருகே மா்மக் காய்ச்சல் பாதிப்பால் தொழிலாளி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அப்பகுதியில் மருத்துவக் குழுவினா் முகாமிட்டு தீவிர சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

குருவரெட்டியூா், கல்லுக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (45). கூலித் தொழிலாளியான இவா், கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டாா். அதே பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவா், அந்தியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உயா் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

அங்கிருந்து, ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குணசேகரன், கடந்த சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மாதேஷ்குமாா் தலைமையில் மருத்துவக் குழுவினா் அப்பகுதியில் முகாமிட்டு வீடுவீடாக பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனா். அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

வீடுகளில் தண்ணீா் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகளில் கொசுப்புழு சோதனை நடத்தியதோடு, வீடுகள், தெருக்களில் கொசுப்புகை புகை மருந்து அடிக்கப்பட்டது.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT