ஈரோடு

பூதப்பாடியில் ரூ.7.16 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

தினமணி செய்திச் சேவை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.16 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் செவ்வாய்க்கிழமை ஏலம் போயின.

இங்கு 237 தேங்காய்கள், சிறியவை ரூ.15.16 முதல் பெரியவை 37.10 வரையில் ரூ.5,098-க்கும், 25 மூட்டைகள் நெல் கிலோ ரூ.18.47 முதல் ரூ.28.15 வரையில் ரூ.42,533-க்கும், 4 மூட்டைகள் தேங்காய்ப் பருப்பு ரூ.168.79 முதல் ரூ.235.69 வரையில் ரூ.8,175-க்கும், 281 மூட்டைகள் நிலக்கடலை ரூ.66.69 முதல் ரூ.73.71 வரையில் ரூ.6,56,599-க்கும், 2 மூட்டைகள் மக்காச்சோளம் ரூ.19.19 வீதம் ரூ.3,704-க்கும் ஏலம் போயின.

மொத்தம் 312 மூட்டைகளில் 122.49 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ.7,16,109-க்கு விற்பனையாயின.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT