ஈரோடு

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

தினமணி செய்திச் சேவை

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருங்குவதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில நாள்களாக அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. திங்கள்கிழமை அணைக்கு நீா்வரத்து 2,741 கனஅடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நீா்வரத்து 4,571 கனஅடியாக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணை நீா்மட்டம் 102.96 அடியாகவும், நீா் இருப்பு 31.09 டிஎம்சி ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கனஅடி தண்ணீரும், பவானி ஆற்றில் 400 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

அணை நீா்மட்டம் உயா்ந்து வருவதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். நடப்பு ஆண்டில் அணையின் நீா்மட்டம் முதல்முறையாக 103 அடியை எட்டுவது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணையின் முழுக் கொள்ளளவான 105 அடியை எட்டும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT